கோபம் • Oct 06, 2020
எதற்கும் அஞ்சேன்
உண்மைதனை உரைப்பவரை ஊர்த்துரோகி என்று
உண்டேப்பம் விட்டதனில் உச்சாகம் கொள்வோம்
கருத்தொருவன் சொல வந்தால் காதில் கொள்ளோம்
நெருப்பெடுத்து நேர்மை என்றோர் பேரும் வைப்போம்
கைக்கூலி பெற்றிருப்பான் கற்பே இல்லான்
திக்கில்லான் தின்ன வழி இல்லான் என்போம்
வயிறதனை நிரப்புகிறான் வசதி துய்த்தான்
மயிர் இவனை மழுங்கடிப்போம் மாய்ப்போம் என்போம்
ஊர்மானம் பெரிதெமக்கு உயிர்கூடக் கொடுப்போம்
பேர் கூடிப் பெரிய சவால் விட்டெழுந்தோம் நன்றி
எண்ணி ஒரு கருத்திட்டேன் ஏற்றகத்தில் கொண்டு
நண்ணி அது சிந்தித்தால் நலங்கொள்வீர் சொன்னேன்
விண்ணதிர நீர் முழங்கி வீறு கொண்டு என்ன
என் கருத்தை உரைத்தேன் நான் எதற்கும் அஞ்சேன்